தூய மூவொரு இறைவனின் திருப்பெயரால் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் உரித்தாகுக!
மகுட நுண்ணி ( கோவிட்- 19 ) தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான அரச நடைமுறைகளும் ஒவ்வொரு பிராந்திய கட்டுப்பாடுகளும் புதிய ஆண்டிலும் தொடர்வதோடு வாராந்தம் நடைபெறும் அரசாங்க கூட்டங்களுக்கு பின் பழைய நிலை தொடர்வதான அல்லது புதிய சில நெறிமுறை வருவதான அறிவித்தல்களை காணுகின்றோம். அதன்படி நமது பணியக செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. திருப்பலிகளில் (பிராந்திய சட்டதிட்டப் படி) 50 அல்லது 30 நபர்கள் மட்டுமே பங்குபற்றும் சூழமைவே இதுவரை தொடர்கிறது. சில பெரிய பணியகங்களில் திருப்பலி நிறைவேற்றும் பங்கு/ ஆலய நிர்வாக அனுசரணையில் ஒன்றுக்கு மேற்பட்ட திருப்பலிகளை நிறைவேற்றுகிறோம். பெரிய பணியகங்கள் மற்றும் 30 நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியுமான பணியகங்களின் இறைமக்கள் உங்கள் வருகையை பணியக செயலாளரிடம் முன்பதிவு செய்து வருகையை உறுதிப்படுத்தி திருப்பலிகளில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இத்தளத்திலுள்ள திருப்பலி அட்டவணை வழக்கமான திருப்பலிகளை மட்டுமே கொண்டுள்ளது. மேலதிகமான திருப்பலி பற்றிய விபரம் அட்டவணையில் இடம் பெறாது என்பதை கவனத்தில் கொள்க. எமது இந்த இணையத்தளத்தை உசாத்துணையாக கொண்டு திருப்பலிகளில் பங்கேற்றும் இறைமக்கள் உங்கள் பதிவுகளுக்காகவும் திருப்பலி பற்றிய விபரமறிவதற்காகவும் பின்வரும் பணியகங்களின் செயலாளர்களை தொடர்பு கொள்ளவும்..
சூரிச் பணியகம் - திரு. வின்ஸ்லோ அன்ரனி டான்சன் ( செல்வா ) அலைபேசி இல. 076 246 65 90
பேர்ண் பணியகம் - திரு. ஆரோக்கியம் சத்தியசீலன் அலைபேசி இல. 079 283 02 39 , 079 963 70 60
பாசல் பணியகம் - திரு. மரிய அருளானந்தம் மரிய ஞானசீலன் அலைபேசி இல. 079 276 27 22
லுட்சேர்ண் பணியகம் - திரு. திருச்செல்வம் யோண்சன் அலைபேசி இல. 079 247 00 44
லொசான் பணியகம் - திரு. இம்மானுவேல் யோசப் மோகன் அலைபேசி இல. 079 692 54 38
சொலத்தூண் பணியகம் - திரு. சத்தியமூர்த்தி ரமேஷ் அலைபேசி இல. 076 396 14 14
ஓல்ரன் பணியகம் - திரு. யூஸ்தீன் எமிலியானுஸ் (எமில்) அலைபேசி இல. 077 925 08 79
ஜெனிவா பணியகம் - திரு. சிவபாதலிங்கம் புஸ்பராஜன் (சுகேன்) அலைபேசி இல. 076 364 16 52.
உங்கள் விளங்கிக்கொள்ளும் தன்மைக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்!
கிறிஸ்துவின் பணியில்
அருட்பணி. சூ. டக்ளஸ் மில்ரன் லோகு
இயக்குநர்
சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம்.